என் டைரி


நட்புக்கு வணக்கம்,
என்னைப் பற்றிய அறிமுகம் அவசியம் என்பதால் இதை எழுத வேண்டியுள்ளது. நான் கார்த்திக்கேயன் தஞ்சாவூரைச் சேர்ந்த 27 வயது வாலிபன் (27 வயது வாலிப வயது தான் என்று நீங்கள் நம்பும் பட்சத்தில்), M.C.A படித்துவிட்டு சென்னை மாநகரத்தில் மணிக்கணக்காக மானிட்டரை முறைத்துப் பார்த்தபடி வாழ்நாளில் பெரும்பகுதியை கழிக்கும் சாப்ட்வேர் இஞ்சீனியர்களில் நானும் ஒருவன். மற்றபடி என் பெயரை சொன்னவுடன் தெரிந்துகொள்ளும் அளவுக்கு ஒன்றும் பிரபலமானவன் கிடையாது, என்னைப் போல் ஒருவனை நீங்கள் எங்கும் பார்த்திருக்கலாம் , உங்கள் பக்கத்து வீட்டில், காய்கறி கடைகளில், கூட்ட நெரிசலில் அவ்வளவு ஏன் இதோ உங்கள் அருகில் பராக்கு பார்த்தபடி 17டி பஸ்ஸுக்காக ஒருவன் காத்திருக்கிறானே அது நானாக கூட இருக்கலாம்.
எந்த தனித்தன்மையும் இல்லாத மிக மிக சாதரணமானவனாக இருந்தாலும் என் வாழ்விலும் போதுமான அளவு சுவாரசியங்கள் இருக்கின்றன, என்னைப் பற்றி மட்டுமே சிந்திக்கும் என் பெற்றோர்கள், எனக்காக எதையும் செய்யும் நண்பர்கள் , சின்னச்சின்ன வெற்றிகள், நிறைய தோல்விகள் , நிறைவேறாத காதல்கள் (ஆம் காதல்கள்), மீள முடியாத துயரங்கள், எண்ணற்ற எதிர்பார்ப்புகள் மற்றும் ஏமாற்றங்கள், மன்னிக்க முடியாத துரோகங்கள் என்று அனைத்தும் என் வாழ்விலும் உண்டு.
சுயசரிதை எழுதும் அளவு நான் எதையும் சாதித்து விடவில்லை ஆனால் சிறு வயது முதலே டைரி எழுதும் ஆசை இருந்திருக்கிறது (ஆனால் எழுதியதில்லை) அதை பூர்த்தி செய்துகொள்ளும் முயற்சி தான் இந்த வலைதளம்.என் வாழ்நாளின் பெரும்பகுதியை நண்பர்களுடனும், புத்தகங்களுடனும் கழித்தவன் நான். எப்பொழுதெல்லாம் தனிமை வாய்க்கிறதோ அப்பொழுதெல்லாம் பழைய நினைவுகளை அசை போடுவது வழக்கம் அது மட்டும் இல்லாமல் மனதில் பதிந்த பழைய நினைவுகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதில் உள்ள சுகம் அலாதியானது. இந்த பிளாகை நீங்கள் படிக்க ஆரம்பித்த நொடியில் இருந்து நீங்களும் என் நண்பனே.நான் எழுத போகும் இந்த வலைதளத்தில் நீங்கள் என்னைப் பற்றி அறிந்து கொள்வதை விட என் நண்பர்களைப் பற்றியே அதிகமாக அறிந்துகொள்வீர்கள் ( என்னைப் பற்றி சொல்வதற்கு அதிகமாக ஒன்றும் இல்லாததும் ஒரு காரணம் ).
இதில் எழுதுவதற்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை, பெரிய எழுத்தாழராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை இப்படி ஆயிரம் செளகரியங்கள் இருந்தாலும் என்னை முக்கியமாக கவர்ந்த அம்சம் இதில் எந்த செலவும் இல்லை என்பது தான். ஆகவே என்னுடைய கடந்த காலத்திற்க்கு என்னுடன் சேர்ந்து நீங்களும் பயணிக்க வாருங்கள் (எப்பொழுது உங்களுக்கு போர் அடித்தாலும் மேலே உள்ள குளோஸ் பட்டனை அழுத்திக்கொள்ளலாம் என்ற உத்தரவாதத்துடன்).
பின் குறிப்பு:
உங்களுக்கு என்னை முன்பே தெரிந்திருந்தால் தயவுசெய்து மேற்கொண்டு படிப்பதை தவிர்க்கவும் ஏனெனில் இதில் நான் உங்களைப் பற்றியும் எழுதியிருக்கலாம்.

6 comments:

  1. உன் நண்பனாய் உந்தன் பல திறமைகளை அறிவேன், தற்போது எழுத்தாளனாய், உன் முயற்சிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்

    - ரா.உதயகுமார்

    ReplyDelete
  2. நல்வரவு.

    ஜோதியில் கலந்தமைக்கு இனிய வாழ்த்து(க்)கள்.

    //எழுத்தாழர்...//

    இதுவும் ஒருவிதத்தில் சரிதான். அதான் கலப்பை வச்சுக்கிட்டு ஆழமா உழுகிறோமே:-))))))


    மாடரேஷன் இருக்குதானே?

    வேர்டு வெரிஃபிகேஷனைத் தூக்கிருங்க.

    இல்லேன்னா பின்னூட்டம் போடச் சோம்பல்படுவோம்!

    ReplyDelete
  3. தஞ்சாவூர்ல எந்த ஊரு?

    ReplyDelete
  4. நன்றி துளசி கோபால், வேர்டு வெரிஃபிகேஷனை தூக்கியாச்சு. டாக்டர் நான் தஞ்சாவூரே தான்

    ReplyDelete
  5. I see !!, Your writting could change the world that you want. Express your thoughts!!. Politics , Business , Entertainment , Sports & Games , Life & Events ,and Health what else?. Meet your like minded here. The top social gathering in one place all the top notches meet here. It is not about win the race, participation is all matters. We proud inviting you to the the internet's best Social community. www.jeejix.com .

    ReplyDelete
  6. நல்ல பிள்ளை, உன்னைப் போல், உன் வகுப்பில் யாருமே கிடையாது. நீ ரொம்ப வேகமாக எழுதுவாயாமே! எங்கே! ஹோம் ஒர்க்கை சீக்கிரம் எழுதி முடி, பார்க்கலாம்,''

    டென்ஷன் என்னும் மனஇறுக்கம், மனித முகங்களில் இருந்து புன்னகையை அப்புறப்படுத்தி பல காலமாகி விட்டது but whenever im reading i am getting refilled the happiness
    Thanks a lot.

    ReplyDelete